×

சூப்பர் வைசருடன் கள்ளத் தொடர்பு… கைவிட மறுத்த மனைவி… 2 பிள்ளைகளை கொன்ற கணவன்!- பாலமேட்டில் நடந்த கொடுமை

கள்ளத் தொடர்பை கைவிடும்படி கண்டித்தும் மனைவி கேட்காததால் ஆத்திரம் அடைந்த கணவன், தனது இரண்டு பிள்ளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடுமையான சம்பவம் பாலமேட்டில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருபவர் உஷாராணி (29). இவரது கணவர் குமார். ஆட்டோ ஓட்டி வரும் இந்த தம்பதிக்கு கோப்பெருஞ்சோழன் (8), சித்தார்த்தன் (6) என்ற மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றி
 

கள்ளத் தொடர்பை கைவிடும்படி கண்டித்தும் மனைவி கேட்காததால் ஆத்திரம் அடைந்த கணவன், தனது இரண்டு பிள்ளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடுமையான சம்பவம் பாலமேட்டில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருபவர் உஷாராணி (29). இவரது கணவர் குமார். ஆட்டோ ஓட்டி வரும் இந்த தம்பதிக்கு கோப்பெருஞ்சோழன் (8), சித்தார்த்தன் (6) என்ற மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ் (45). இவருக்கும் உஷாராணிக்கும் நீண்ட நாளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இது கணவர் குமாருக்குத் தெரியவந்ததும் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும் இவர்களின் கள்ளத் தொடர்பு துளிர்விட்டு வளர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குமார், கனகராஜை கொலை முடிவு செய்துள்ளார்.

கள்ளக்காதலன் கனகராஜ்

இதனிடையே, தனது திருமண ஆல்பம் மற்றும் குடும்ப போட்டோக்களில் இருந்த மனைவியின் முகத்தை கத்தியால் கீறி அழித்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்ற குமார், அங்கு நின்றிருந்த கனகராஜின் கழுத்தில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கனகராஜ் கீழே விழுந்தார். இறந்துவிட்டார் என்று குமார் தப்பியோடிவிட்டார். உடன் வேலை செய்தவர்கள் கனகராஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குமாரை காவல்துறையினர் தேடினர். அவர் தனது இரண்டு மகன்களுடன் தலைமறைவானார்.

இந்த நிலையி்ல், வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமார், தனது இரு மகன்களுடன் குருணை மருந்து அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் சித்தார்த், கோப்பெருஞ்சோழன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உஷாராணியைத் தேடி வருகின்றனர்.

மனைவியின் கள்ளத் தொடர்பால் இரண்டு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.