×

`இந்த உயிர் மயிருக்கு சமம்; யாரும் பீல் பண்ணாதீங்க!’- ஃபேஸ்புக் லைவில் வாலிபர் தற்கொலை… பதறிய நண்பர்கள்… காப்பாற்ற ஓடோடி வந்த மனைவி

இந்த உலகத்தை வெறுத்து வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்த கடிதம் அனைவரையும் பதறவைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த ராம்குமார் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுகாசினி. இந்த தம்பதிக்கு நவநீத் இருக்கிறார். தனது குடும்பத்துடன் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் ராம்குமார். மனைவி சுகாசினி அருகில் உள்ள
 

இந்த உலகத்தை வெறுத்து வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்த கடிதம் அனைவரையும் பதறவைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த ராம்குமார் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுகாசினி. இந்த தம்பதிக்கு நவநீத் இருக்கிறார். தனது குடும்பத்துடன் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் ராம்குமார். மனைவி சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை என்பதால் மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டு வந்துள்ளார் ராம்குமார்.

இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் தாராபுரத்தில் உள்ள தனது தந்தையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, பேசிய ராம்குமார், அப்பா நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என் மகனை பத்திரமாக பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனால் அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். இதனால் பதற்றம் அடைந்த அவர், உடனடியாக தனது மருமகளை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார், முடியவில்லை. இதனிடையே, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்துள்ளார் ராம்குமார். அப்போது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காட்சி முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானதால் இதனை பார்த்த அவரது நண்பர்கள், ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முயன்றுள்ளனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது மனைவிக்கு சென்றுள்ளது. பதறியபடி ஓடோடி வந்த சுகாசினி, தனது கணவர் ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். ஆனால், அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ராம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், “தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. மானம் கெட்ட உலகம். இனி வாழ எனக்கு விருப்பம் இல்லை. இந்த உயிர் மயிருக்கு சமம். யாரும் பீல் பண்ணாதீங்க” என எழுதி வைத்துள்ளார். ராம்குமார் தற்கொலை செய்தபோது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“மானம் கெட்ட உலகம். இந்த உயிர் மயிருக்கு சமம்” என்று உலகத்தை வெறுத்து ஃபேஸ்புக்கில் நேரலை செய்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.