☰
×

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை நண்பர் உதவியுடன் கொலை செய்த பெண

 

கர்நாடக மாநிலத்தில் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை செய்த ஒருவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பெலகாவி மாவட்டம், அதானி தாலுக்காவில் உள்ள பல்லிகேரி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இறந்தவர் ரணவீர் ராஜ்புத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  செப்டம்பர் 21 அன்று நடந்த இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, அதானி போலீசார் ஸ்ரீதேவி ராஜ்புத் மற்றும் அவரது நண்பர் பைரு பவார் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, இறந்த ரணவீர், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதேவியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதேவி, இந்த விஷயத்தைத் தனது பள்ளித் தோழரான பைரு பவாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து ரணவீரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு,  பைரு, தனது பைக் ஸ்டார்ட் ஆகவில்லை எனக் கூறி ரணவீரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர், அவர் திடீரென ரணவீரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். குற்றத்தைச் செய்த உடனேயே, அவர் ஸ்ரீதேவியை அழைத்து இந்த விஷயத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்திய அதானி போலீசார், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக அதானி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.