×

இளநீர் வியாபாரி கொலை; 12 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கரூர் கரூரில் இளநீர் வியாபாரி வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 12 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் – கோவை சாலையில் டான்சிக்கு எதிரே இளநீர்கடை நடத்தி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக
 

கரூர்

கரூரில் இளநீர் வியாபாரி வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 12 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் – கோவை சாலையில் டான்சிக்கு எதிரே இளநீர்கடை நடத்தி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கொலையாளிகளான கரூர் கோகுலகிருஷ்ணன், மதுரை துரைப்பாண்டி, தேவகோட்டை பிரேம்குமார் உள்ளிட்ட 12 பேரை கைதுசெய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் பரிந்துரையின் பேரில், கொலை குற்றவாளிகள் 12 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் 12 பேரையு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.