மாற்றுத்திறனாளி சிறுமி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!
Sep 27, 2026, 16:24 IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து வீடு புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை நாசம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று முன் தினம் சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது.