×

`ஊரடங்கில் பைக் ஓட்டினார்; பறிமுதல் செய்த போலீஸ்!’- ஆம்பூரை பதறவைத்த தீக்குளிப்பு

ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றிய வாலிபரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் வேதனை அடைந்த வாலிபர் நடுரோட்டில் தீக்குளித்தார். இது தொடர்பாக 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. கடந்த 12ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் ஆம்பூரை சேர்ந்த முகிலன் (27) என்ற வாலிபர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்
 

ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றிய வாலிபரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் வேதனை அடைந்த வாலிபர் நடுரோட்டில் தீக்குளித்தார். இது தொடர்பாக 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. கடந்த 12ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் ஆம்பூரை சேர்ந்த முகிலன் (27) என்ற வாலிபர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தத காவலர்கள், முகிலனை பிடித்துள்ளனர். பின்னர் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த முகிலன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று மண்ணெண்ணை எடுத்து வந்து வாகனம் பறிமுதல் செய்த இடத்தில் தீக்குளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 90 சதவிகித தீக்காயத்துடன் முகிலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் விசாரணை செய்தார். இதையடுத்து, இதில் தொடர்புடைய காவலர்கள் 5 பேர் மற்றும் ஊர்காவல் படையினர் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.