×

“மொபைல்ல மோசமான விஷயத்துக்கு அடிமையாயிட்டியே”- வெட்டவெளியில் வாலிபர் செஞ்ச செயல்.

ஒரு வாலிபரிடம் மொபைல் கேமில் தோற்றவர்கள் அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நந்த்கான் தாலுகாவில் ஜிபாவ் கெய்க்வாட் என்ற 19 வயது டீனேஜ்வாலிபர் எந்நேரமும் செல்போனிலேயே இருப்பார் .அவர் மொபைலில் கேம் விளையாடுவதும் ,பல படங்களை பார்ப்பதுமாக இருந்துள்ளார் .மேலும் அதில் ‘பிரீ பையர்’ என்ற விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்அந்த விளையாட்டில் அவரிடம் பலர் தோல்வியடைந்துள்ளார்கள் .அதனால் அந்த வாலிபரை விளையாட்டில் ஜெயிக்க முடியாதவர்கள் அவரை வேறு வகையில் பழி தீர்க்க
 

ஒரு வாலிபரிடம் மொபைல் கேமில் தோற்றவர்கள் அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நந்த்கான் தாலுகாவில் ஜிபாவ் கெய்க்வாட்
என்ற 19 வயது டீனேஜ்வாலிபர் எந்நேரமும் செல்போனிலேயே இருப்பார் .அவர் மொபைலில் கேம் விளையாடுவதும் ,பல படங்களை பார்ப்பதுமாக இருந்துள்ளார் .மேலும் அதில் ‘பிரீ பையர்’ என்ற விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்
அந்த விளையாட்டில் அவரிடம் பலர் தோல்வியடைந்துள்ளார்கள் .அதனால் அந்த வாலிபரை விளையாட்டில் ஜெயிக்க முடியாதவர்கள் அவரை வேறு வகையில் பழி தீர்க்க காத்திருந்தார்கள் .
அதனால் நவம்பர் 26 அன்று பகலில் அந்த வாலிபர் ஒரு வயல் வெளியில் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த சுனில் மோர் என்ற 19 வயது வாலிபர் அவரை பிடித்து அவரை கடுமையாக தாக்கினார் .அந்த தாக்குதலில் நிலை குலைந்த அந்த கெய்க்வாட் அங்கேயே மயங்கி விழுந்தார் .அதனால் அந்த வாலிபர் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .அவரின் நிலையை கண்ட சுனில் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .
அதன் பிறகு கெய்க்வாட் மயங்கி கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவ் இறந்து விட்டதாக அறிவித்தார்கள் .
பின்னர் போலீசில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் .போலீஸ் விசாரணையில் சுனில் மோர் என்ற 19 வயதானவர் அவரை கொன்றார் என்று கண்டறியப்பட்டது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.


அவர் மேலும் கூறுகையில் “ஃப்ரீ ஃபயர் என்ற மொபைல் விளையாட்டுக்கு அதிகமானவர்கள் அடிமையாக உள்ளனர், இது கொலைக்கு வழிவகுத்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.