6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
தருமபுரி அருகே அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆங்கில ஆசிரியர் குமரேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தலைமையாசிரியர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அரசு பள்ளி மாணவிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது ஒன்பது மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஆறு மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறைமினர் ஆசிரியர் குமரேசன் (55) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ஆசிரியர் குமரேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒரேநேரத்தில் 6 மாணவிகள் புகார் அளித்துள்ளதால் கல்விதுறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.