×

"மாணவிகளே! உங்க யூனிஃபார்மல்லாம் கழட்டிட்டு .."தண்ணியடிச்ச உதவி  தலைமையாசிரியரின் உல்லாச வேலை.  

 

தண்ணியடித்து விட்டு பள்ளிக்கூடத்தில் மாணவிகளுடன் நடனம் ஆடி ,சில்மிஷம் செய்த உதவி ஹெட் மாஸ்டரை விசாரணை செய்து வருகின்றனர் 

தமிழகத்தின் பெரம்பலுார் மாவட்டம், காரை கிராமம், மலையப்பநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தில் பல மாணவிகளும் ,மாணவர்களும் படித்து வருகின்றனர் .பல ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர் 


இந்நிலையில், அங்கு உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் 43 வயதான சின்னத்துரை என்பவர் நேற்று பள்ளிக்கு குடிபோதையில் வந்தார் . அப்போது அவர் அங்கிருந்த மாணவிகளை மட்டும் சீருடையெல்லாம் வேண்டாம் ,அதனால் அதை கழட்டி விட்டு ,கலர் உடையில் வரச்சொல்லி வீட்டுக்கு அனுப்பினார் .பின்னர் மாணவிகள் வீட்டுக்கு சென்று கலர் உடையில் ஸ்கூலுக்கு வந்ததும் அவர்களை  அவரின் ரூமிற்குள் கூட்டி சென்றார் .பின்னர் செல்போனில் பாடல்களை ஒலிக்க விட்டு அந்த மாணவிகளை டான்ஸ் ஆட சொல்லிவிட்டு அவரும் மாணவிகளுடன் டான்ஸ் ஆடினார் 
அவர் மாணவிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியதோடு, மாணவிகளிடம் அத்துமீறியதாகவும், சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.இந்த விஷயம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது .அதனால்  பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் ஆசிரியர் குடிபோதையில் மாணவிகளிடம் அத்துமீறியது உண்மை என தெரிய வந்ததால் ,அவரிடம் விசாரித்து வருகின்றனர்