×

“மனைவியின் எடைய குறைக்கிறேன்னு இப்படி பண்ணிட்டியே” -டாக்டர் பண்ண வேலையால் கொதித்த கணவர்

ஒருவரின் மனைவியின் எடையை குறைப்பதாக கூறி பணம் வசூலித்து விட்டு எடையை குறைக்காததால் நோயாளியின் கணவரால் டாக்டர் தாக்கப்பட்டார் . குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர், மனோஜ் துதாகரா . இவர் அந்த பகுதியில் க்ளினிக் நடத்தி வரும் டாக்டர் அஜய் மொராடியாவிடம் கடந்த சில மாதங்களாக அவரது மனைவியின் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தார் அதற்காக அந்த டாக்டர் அவரிடம் கட்டணம் வசூலித்தார்
 


ஒருவரின் மனைவியின் எடையை குறைப்பதாக கூறி பணம் வசூலித்து விட்டு எடையை குறைக்காததால் நோயாளியின் கணவரால் டாக்டர் தாக்கப்பட்டார் .


குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர்
, மனோஜ் துதாகரா . இவர் அந்த பகுதியில் க்ளினிக் நடத்தி வரும் டாக்டர் அஜய் மொராடியாவிடம் கடந்த சில மாதங்களாக அவரது மனைவியின் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தார் அதற்காக அந்த டாக்டர் அவரிடம் கட்டணம் வசூலித்தார் . இருப்பினும், அவர் எதிர்பார்த்த படி அவரின் எடை குறைய வில்லை. இதனால் மனம் உடைந்த துதகர, டாக்டர் மொராடியாவிடம் தனது பணத்தை திருப்பித் தருமாறு கோரினார். அதன் பிறகு டாக்டர் மொராடியா பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு அந்த ஆசிரியர் துதகர, டாக்டரிடம் நடத்திய வாக்குவாதத்தின் போது,அந்த ​​மருத்துவரை இரும்புக் கம்பியால் தாக்கினார். பின்னர் அவர் பணப்பையிலிருந்து ரூ .1,500 கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது .பின்னர் டாக்டர் , மொராடியாவுக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது அந்த ஆசிரியர் துதகராவைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.