×

“குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” : பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அப்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
 

உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அப்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் என்னிடம் அறிவுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.