×

‘குடிபோதையில் தகராறு’.. மகனே தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரம்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாகக் கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் இருந்து வன்முறை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே குடிபோதையில் மகனே தந்தையைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள்
 

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாகக் கிட்டத்தட்ட 60 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதில் இருந்து வன்முறை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே குடிபோதையில் மகனே தந்தையைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை அவர்கள் தாய் தட்டிக்கேட்க. தந்தை ஏதும் கேட்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைய மகன் இருளேஸ்வரன், சந்திரனை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்றிருக்கிறார்.

அப்பகுதியில் இருக்கும் கோவில் வாசலில் முன்னர் சந்திரனை கீழே தள்ளிய இருளேஸ்வரன், அவரின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த சந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சந்திரனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இருளேஸ்வரனை கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.