தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்!
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டியில் மகனே தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குள்ளம்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தங்கவேல் தனது மனைவி பத்மாவதியுடன் வசித்து வந்துள்ளார். இதன்டைய அவரது மகன் விஜயகுமார், தந்தை தங்கவேலுடன் பென்ஷன் பணத்தை கேட்டு அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பென்ஷன் பணத்தை கேட்டு மகன் விஜயகுமார், தந்தை தங்கவேலுவை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தங்கவேலுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 2 ஆம் தேதி அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவூர் போலீசார் முன்னதாக அடுத்த அடி தடி தகராறு என்று வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது கொலை வழக்காக பதிவு செய்து தங்கவேல் மகன் விஜயகுமாரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவத்தை மகன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.