×

“25 லட்சம் கொடுக்கிறேன் ,ஒரு குழந்தை கொடுங்க” -ஆசை காமித்த பெண்ணால் மோசம் போனார்கள் .

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து 3 மாத குழந்தையை கடத்திச் சென்று விற்க முயன்ற 6 பேர் கொண்ட குழுவை அம்பத்தூர் தொழில்பேட்டையில் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் சந்தியா தம்பதிகளுக்கு ஒரு மூன்று மாத குழந்தை இருந்தது . நவம்பர் 9 ஆம் தேதி, அந்த குழந்தையின் பெற்றோர் போலீஸ்காரர்களை அணுகி தங்களின் குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்தனர். அப்போது அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை
 

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து 3 மாத குழந்தையை கடத்திச் சென்று விற்க முயன்ற 6 பேர் கொண்ட குழுவை அம்பத்தூர் தொழில்பேட்டையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் சந்தியா தம்பதிகளுக்கு ஒரு மூன்று மாத குழந்தை இருந்தது . நவம்பர் 9 ஆம் தேதி, அந்த குழந்தையின் பெற்றோர் போலீஸ்காரர்களை அணுகி தங்களின் குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்தனர். அப்போது அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை கடத்தப்பட்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து 600 சி.சி.டி.வி கேமராக்களை ஸ்கேன் செய்து பல இடங்களில் தேடல்களை நடத்திய பின்னர், செங்குட்டவன் என்ற நபரை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அபிநயா என்ற ஒரு பெண், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாகவும், அதற்கு ரூ .25 லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.

அதனால் செங்குட்டுவன் கணேஷ் என்பவரிடம் ஒரு குழந்தைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.அதற்கு அவருக்கு ரூ .10 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்தார். கணேஷ், பாபு என்ற 16 வயது சிறுவனிடமிருந்து 3 மாத குழந்தையை கடத்தி வந்தார்.
பின்னர் செங்குட்டுவன் குழந்தையை அபிநயாவிடம் தூக்கி சென்றபோது அவர் பிறப்புச் சான்றிதழைக் கேட்டார் . அதனால் அந்த கும்பல் பீதியடைந்து குழந்தையை நடைபாதைக்கு அருகே விட்டுச் சென்றது, பின்னர் குழந்தை அங்கிருந்து மீட்கப்பட்டது
இந்த வழக்கில் பாபு, அவரது மனைவி காயத்ரி, செங்குட்டுவன் மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள் .