×

வீட்டின் சின்டெக்ஸ் தொட்டியில் பெண் உடல் பாகங்கள்- சேலத்தில் அதிர்ச்சி

 

சேலம் நான்கு ரோடு அருகே பெண் ஒருவரை துண்டுதுண்டாக வெட்டி சிண்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்குள் உடல் பாகங்கள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தில் ரமேஷ் என்பவரின் வீட்டின் சிண்டெக்ஸ் டேங்கில் 2 மூட்டைகளில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. ரமேஷ் குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய நிலையில், இன்று காலை, வீட்டின் குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் உரிமையாளர் சிண்டெக்ஸ் தொட்டியை பார்த்தபோது சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலின் மேலும் சில பாகங்கள் அதே பகுதியில் சீனிவாசன் என்பவர் வீட்டின் மாடியில் மீட்கப்பட்டுள்ளது. சீனிவாசன் என்பவரது வீட்டின் குடிநீர் தொட்டிக்கு கீழே மூட்டையில் வைத்து வீசியுள்ளனர். 3வது மூட்டையில் மீட்கப்பட்ட பாகங்களில் கையில் கணபதி என பச்சைக் குத்தப்பட்டுள்ளது. பெண்ணின் கையில் உள்ள அடையாளத்தை வைத்து அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் யார், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.