ஆணுறுப்பை வெட்டினேன்... கணவரை கொன்று சூட்கேஸில் அடைத்த பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி தலையில்லாத ஆண் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரனையில் இறங்கிய நிலையில், கொலை செய்யப்பட்டது அமீர் அலி என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொலை செய்ததாக அவரது மனைவி ரஹீமா, அவரது ஆண் நண்பர் அஸ்ரம் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண் ரஹீமா கணவனை கொலை செய்தது ஏன் என போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், "அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். பல பெண்களோடு அமீர் அலி உறவில் இருந்தார். அதனை தட்டிக்கேட்டதால் முதல் வாழ்க்கையை பற்றி பேசி என்னை அமீர் அலி அடித்தார். ஆகவே அஸ்ராம் அலி என்பவரோடு சேர்ந்து அமீரை கொலை செய்தேன். ஆணுறுப்பை வெட்டினேன். என்னை ஏமாற்றி விட்டு வேறு சிலரோடு இருந்ததை ஏற்க முடியவில்லை. உடல் பாகங்களை வெவ்வேறு இடத்தில் வெட்டி வீசிவிட்டேன். எனது நண்பர் அஸ்ராம் அதற்கு உதவினார்” என்றார். தலை கிடைக்காததால் ரஹீமா கூறிய தகவலின்படி கிண்டி, தேனாம்பேட்டை பகுதிகளில் போலீசார் தேடிவருகின்றனர்.