திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை
Jan 29, 2022, 21:45 IST
சமயநல்லூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் வீரமுத்து வயது(22). இவர் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.