“ஆடையின்றி வீடியோ அனுப்புமாறு வற்புறுத்தினார்”- தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்
தமிழக வெற்றி கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G.விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்க வந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, வீடியோ காலை Screen Record செய்து மிரட்டி பாலியல் தொல்லை தந்ததாகத் தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனுவில், “தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.G.விஜய்மோகன் அவர்கள், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியான தகாத வார்த்தைகள் பேசியது, ஆடையின்றி வீடியோ அனுப்புமாறு வற்புறுத்தியது, இணக்கமின்றி பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் காட்டி மிரட்டி உடலுறவு கொள்ளுமாறு நிர்பந்தித்தது தொடர்பான புகார்.
ஐயா,
நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் என்னை இணைத்துக் கொள்வதற்காக அக்கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.G.விஜய் மோகன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எனக்கு கட்சியில் மகளிர் அணி பொறுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் கண்டிப்பாக நம் கட்சி பெண்களுக்கான கட்சியே உங்களுக்கு முன்னுரிமை உண்டு அப்படி என்று கூறினார். ஒரு சில நாட்கள் கழித்து நான் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஏதேனும் விழாக்கள் செய்யும்பொழுது என்னை அழையுங்கள் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன். பிறகு அவர் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தார். நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பேசுகின்ற வார்த்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் கூறிய வார்த்தை கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது நான் உனக்காக செய்கிறேன் என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். நான் உனக்கு கட்சியில் பதவி கொடுத்தால் நீ எனக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்.
நான் என்ன கொடுப்பது என்னிடம் எதுவும் இல்லையே என்று கூறினேன் அதற்கு அவர் ஒரு சில ஆசை வார்த்தைகள் கூறி எனக்கு வீடியோ கால் செய் அது போதும் அப்படி என்று கூறினார். இதனைத்தும் இன்ஸ்டாகிராம் காலில் பேசியது. அதன் பிறகு எனக்கு வீடியோ கால் செய்தார். அழகாக இருக்கிறாயே உனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று ஒரு சில வார்த்தைகள் பேச தொடங்கினார் அப்பொழுதுதான் என்னுடைய மார்பகத்தை காமி என்று கூறினார். நான் அதெல்லாம் தவறு என்று கூறி கால் கட் செய்து விட்டேன். பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்டு உனக்கு கட்சியில் பதவி வேண்டுமா என்று கேட்டார் அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு இதுபோல சின்ன விஷயங்களை ஆவது எனக்காக நீ செய்து கொடுத்தால் நான் உனக்கு கட்சியில் பதவி தருகிறேன். நானும் சரி வீடியோ கால் தானே அப்படி என்று காண்பித்து விட்டேன். அதை உடனடியாக அவர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டு அதை வைத்து என் முழு உடலையும் காமி என்று என்னை மிரட்டினார். அதனையும் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்து வைத்துக் கொண்டு பயப்படாதே நான் இதை எதுவும் செய்ய மாட்டேன் என்று சில ஆசை வார்த்தைகள் கூறி உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள் எனக் கூறுவருகிறார். அவர் மீது BNS 75, 78, 308, 351 & IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.