×

“ஏண்டா! தினம் ராத்திரி லேட்டா வீட்டுக்கு வரியே ?”மகனை கண்டித்த தாய் -கோபமுற்ற மகன் தாயை கத்தியால் குத்தி கொன்றார்.

பெங்களூரின் மண்டியா நகரில் ஒரு தாயும் மகனும் தனியே வசித்து வந்தனர் .அந்த மகன் ஒரு கல்லூரி மாணவர் .அவர் தினமும் தனது நண்பர்களோடு இரவில் தங்கிவிட்டு ,லேட்டாக வீட்டுக்கு வருவார் .இதனால் அந்த தாயார் மகனிடம் “இப்படி அடிக்கடி இரவு நேரத்தில் வெளியே சுற்றிவிட்டு லேட்டா வீட்டுக்கு வரியே இது உனக்கே சரியா தோணுதா ?”என்று கண்டித்துள்ளார் . இதனால் அந்த மகன் தன்னுடைய தாயாரிடம் “சரிம்மா ,இனிமேல் அப்படி லேட்டா வரமாட்டேன் சீக்கிரம் வந்துடறேன்
 

பெங்களூரின் மண்டியா நகரில் ஒரு தாயும் மகனும் தனியே வசித்து வந்தனர் .அந்த மகன் ஒரு கல்லூரி மாணவர் .அவர் தினமும் தனது நண்பர்களோடு இரவில் தங்கிவிட்டு ,லேட்டாக வீட்டுக்கு வருவார் .இதனால் அந்த தாயார் மகனிடம் “இப்படி அடிக்கடி இரவு நேரத்தில் வெளியே சுற்றிவிட்டு லேட்டா வீட்டுக்கு வரியே இது உனக்கே சரியா தோணுதா ?”என்று கண்டித்துள்ளார் .


இதனால் அந்த மகன் தன்னுடைய தாயாரிடம் “சரிம்மா ,இனிமேல் அப்படி லேட்டா வரமாட்டேன் சீக்கிரம் வந்துடறேன் “என்று கூறியுள்ளார் .பிறகு சில நாட்கள் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துள்ளார் .
கடந்த புதன்கிழமையன்று அவரின் மகன் மீண்டும் இரவு நேரத்தில் நண்பர்களோடு ஊரை சுற்றிவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்தியுள்ளார் .தனது மகன் மீண்டும் இப்படி இரவு நேரத்தில் ஊர் சுற்றுவது பிடிக்காத அந்த தாய் அவருக்கு பாடம் புகட்ட ,சிறிது நேரம் கழித்து வந்து கதவை திறந்துள்ளார் .இதனால் அவரின் மகன் கோபமுற்று அந்த தாயிடம், “கதவை திறக்க ஏன் இவ்வளவு லேட் ,இப்படி தூங்கறியே ?”என்று திட்டி சண்டை போட்டுள்ளார் .
இதை கேட்டு கோபமுற்ற அந்த தாய் ,”நீ இப்படி இந்த கொரானா பரவும் நேரத்தில் ஊரை சுற்றி விட்டு நடுராத்திரி வர்றியே உனக்கே இது சரியா தோனுதா ?”என்று கேட்டுள்ளார் .இதனால் கோபமுற்ற அவரின் மகன் தன்னுடைய தாய் என்றும் பார்க்காமல் அவரை கத்தியால் குத்தியுள்ளார் .இதனால் அந்த இடத்திலேயே அந்த தாய் துடிதுடித்து இறந்தார் .பிறகு அருகிலுள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .விரைந்து வந்த போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.