×

ஓடிபி எண்ணை கொடுத்த அடுத்த நொடியே ரூ.4.8 லட்சம் அபேஸ்!- மோசடி கும்பலால் மத்திய அரசு ஊழியருக்கு நடந்த சோகம்

ஓய்வு பெற்ற சென்னை ஆவடி எச்.வி.எப். பணியாளரிடம் மொபைல்போனில் ஓ.டி.பி. எண் கேட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து 4.8 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த ஆவடி, வீராபுரம், ஏ.கே.ஏ.நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (64). கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கில் துவங்கி பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி
 

ஓய்வு பெற்ற சென்னை ஆவடி எச்.வி.எப். பணியாளரிடம் மொபைல்போனில் ஓ.டி.பி. எண் கேட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து 4.8 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அடுத்த ஆவடி, வீராபுரம், ஏ.கே.ஏ.நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (64). கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கில் துவங்கி பணத்தை சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மதியம் 2 மணியளவில் அவரது மொபைல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு ஹிந்தி மொழியில் ‘உங்களது மொபைல்போனுக்கு வந்துள்ள ஓ.டி.பி. எண்ணை கூறுங்கள்’ எனக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட புஷ்பராஜ் பேசுவது வங்கி அதிகாரிதான் என நம்பி ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இரண்டுக்கு மேற்பட்ட முறை மேலும் சிலர் புஷ்பராஜை தொடர்பு கொண்டு ஓ.டி.பி. எண்களை பெற்றுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 4.8 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக புஷ்பராஜ் மொபைல்போனுக்கு தகவல் சென்றுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.