×

பிரபல ரவுடி படுகொலை! பரபரப்பில் திருச்சி

 

திருச்சியில் இரவு நேரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே நள்ளிரவில் பைக்கில் சென்ற பிரபல ரவுடி பாதுஷாவை துரத்தி சென்று வெட்டி படுகொலை செய்த கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர். இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்று கீழே விழுந்தவரை சுற்றி வளைத்து கொலை செய்த கொடூர சம்பவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முதல்கட்ட விசாரணையில், பெண் ஒருவருடன் தொடர்பு காரணமாக பாதுஷாவுக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்த‌து தெரிய வந்துள்ளது. இருப்பினும் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட‌ கொலையா, கோஷ்டி மோதலா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலில் பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டானதாகவும் கூறப்படுகிறது.