×

சோதனையில் சிக்கிய ஆயுதங்கள்… போலீஸ் ஏட்டை பதறவைத்த ரவுடி… வாகன தணிக்கையில் நடந்த பயங்கரம்

வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகளில் ஒருவர் போலீஸ் ஏட்டை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு தப்பினார். சிக்கிய ரவுடியிடம் இருந்து கத்தி, அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் போதை கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநிலம் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை, மதுரையில் அண்மையில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைத்து மாவட்ட எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்து
 

வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகளில் ஒருவர் போலீஸ் ஏட்டை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு தப்பினார். சிக்கிய ரவுடியிடம் இருந்து கத்தி, அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் போதை கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநிலம் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை, மதுரையில் அண்மையில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அனைத்து மாவட்ட எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல்நிலையம் முன்பு இரண்டு காவலர்களுடன் தலைமைக் காவலர் திருப்பதி வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென பையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து திருப்பதியின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ஆனால் பைக்கை ஓட்டி வந்தவர் காவல்துறையினரிடம் சிக்கினார். இதனிடையே, பலத்த காயம் அடைந்த காவலர் திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பிய முத்துலிங்கம் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.