×

இன்னொரு ‘ஆட்டோ சங்கராக’ உருவாகவிருந்த ரவுடி சங்கர் -அயனாவரம் என்கவுன்டரில் நடந்தது என்ன ?

நேற்று காலையில் சென்னை அயனாவரம் பகுதியில் பலவருடங்களாக பல கொலை ,கொள்ளை ,போதை பொருள் கடத்தல் ,வெட்டு ,குத்து , கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் போன்ற 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியிருந்த ரௌடி சங்கரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் ஒரு கான்ஸ்டபிளை தாக்கியதால் போலீசார் அவரை என்கவுன்டரில் சுட்டு தள்ளினார்கள் . சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரிடமிருந்து ஏற்கனவே போலீசார் 800 கிலோ கஞ்ஜாவை பறிமுதல் செய்துள்ளனர் ,அவர் போலீசாருக்கு பல வழக்குகளில் டிமிக்கி கொடுத்து விட்டு
 

நேற்று காலையில் சென்னை அயனாவரம் பகுதியில் பலவருடங்களாக பல கொலை ,கொள்ளை ,போதை பொருள் கடத்தல் ,வெட்டு ,குத்து , கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் போன்ற 50 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியிருந்த ரௌடி சங்கரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் ஒரு கான்ஸ்டபிளை தாக்கியதால் போலீசார் அவரை என்கவுன்டரில் சுட்டு தள்ளினார்கள் .


சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரிடமிருந்து ஏற்கனவே போலீசார் 800 கிலோ கஞ்ஜாவை பறிமுதல் செய்துள்ளனர் ,அவர் போலீசாருக்கு பல வழக்குகளில் டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் . பல முறை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் தப்பியுள்ளார் .
அவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் பல கொலை ,கொள்ளை வழக்குகளில் சிக்கியிருந்த ஆட்டோ சங்கருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன . என்கவுன்டரில் அவரை போடாமல் விட்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் இன்னொரு ஆட்டோ சங்கராக அயனாவரம் பகுதியில் உருவாகியிருப்பார் என்று ஒரு அதிகாரி கூறினார் .
அவரின் ராஜ்ஜியம் அயனாவரம் பகுதியிலிருந்து வடசென்னை வரை நீண்டிருந்ததாகவும் ,அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரின் அராஜகத்தால் நிம்மதியிழந்து வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார் .மேலும் போலிஸ் அதிகாரி அகர்வால் நேற்று பேட்டியளித்தபோது அவர் மீதிருக்கும் பல கொலை, கொள்ளை வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்ததாக கூரினார் .இந்த ரௌடி சங்கரின் என்கவுன்ட்டரால் வடசென்னை பகுதி ரௌடிகள் பயத்தில் உள்ளார்கள்.