×

அரை நிர்வாண உடம்பில் ஓவியம் விவகாரம்.. எர்ணாகுளம் காவல்நிலையத்தில் சரணடைந்த ரெஹானா பாத்திமா

சபரிமலைக்கு செல்ல முயன்று பிரபலமான கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் தனது குழந்தைகளை தனது அரை நிர்வாண உடலில் ஒவியம் வரைய செய்து அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் கணக்கிலும், தனது யூ டியூப் சேனலிலும் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வழக்கறிஞர் ஏ.வி. அருண் பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவல்லா போலீஸ் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு
 

சபரிமலைக்கு செல்ல முயன்று பிரபலமான கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில் தனது குழந்தைகளை தனது அரை நிர்வாண உடலில் ஒவியம் வரைய செய்து அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் கணக்கிலும், தனது யூ டியூப் சேனலிலும் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வழக்கறிஞர் ஏ.வி. அருண் பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவல்லா போலீஸ் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத சிறார் நீதி சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளையும் போலீசார் செய்தனர்.

தான் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்த ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து நேற்று மாலை எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு, ரெஹானா பாத்திமாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்தது அதனால்தான் ரெஹானா பாத்திமா வேலையிலிருந்து நீக்கியது.