×

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரம்! சிறுவனை கொன்று  புதருக்குள் வீசிய கொடூரம்

 

தன்பாலின சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொன்று உடலை புதருக்குள் வீசி சென்று இருக்கிறார்கள்.  இந்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். 

 கர்நாடக மாநிலத்தில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பெண்டிகேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்டமணி காலனி பகுதியை சேர்ந்தவர் உசேன் ஷாப். இவரின் மகன் நசீம் உசேன் . இந்த சிறுவனுக்கு எட்டு வயது. 

 நேற்று முன்தினம் இந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே சென்று இருக்கிறான்.   பின்னர் வீடு திரும்பவே இல்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை பல இடங்களிலும் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.   எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்பதால் உசேன் சாப் ,  பெண்டிகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.   இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் தான் நேற்று காலையில் தொட்ட ணி காலணியில் புதருக்குள் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்திருக்கிறது.  இதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு புதருக்குள் கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர்.   பின்னர் போலீசாரின் விசாரணையில்  காணாமல் போன சிறுவன் நசீம் உசேன் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இதன் பின்னர் சிறுவன்  உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.    சிறுவனின் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தன்பாலினச் சேர்க்கைக்கு மறுத்ததால் மர்ம நபர்கள் சிறுவனை கொலை செய்துவிட்டு உடலை புதருக்குள் வீசி சென்றது தெரிய வந்திருக்கிறது.

 இதையடுத்து பெண்டிகேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மர்ம நபர்களை பிடிக்க வலை வீசி தேடி வருகின்றார்கள்.  எட்டு வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும்  சம்பவம் தொட்டமணி காலனியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.