83 முறை கத்திக்குத்து- கலங்க வைக்கும் ஆணவக்கொலை
பஞ்சாப் மாநிலத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஜசன்பிரீத் என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று, 20 வயது இளைஞர் ஒருவர் தனது மைத்துனர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டார். அவர், மைத்துனர்களின் சகோதரியைக் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தது ஜக்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவதன்று, ஜக்ஜித் சிங் மாமியார் தர்ன் தாரன் போன் செய்து பேருந்து நிலையத்திற்கு அழைத்துள்ளார். இதனால் ஜக்ஜித் சிங் அவரை காண சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் அவரது வீட்டிற்குச் செல்ல விரும்புவதாக அவரிடம் கூறியுள்ளார். வீட்டில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அறியாத ஜக்ஜித், சந்தையில் வாங்கிய குளிர்பானம் மற்றும் தின்பண்டங்களுடன் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் ஜக்ஜித் சிங்கை சுற்றிவளைத்த பெண்ணின் சகோதரர்கள், தங்களது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ததது ஏன் என கோபப்பட்டு ஜக்ஜித் சிங்கை 83 முறை கத்தியால் கொலை செய்துள்ளனர். வெறும் 37 விநாடிகளில் 83 முறை குத்தியதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஜக்ஜித் சரிந்து விழுந்து இறந்த பிறகும், தாக்குதல் நடத்தியவர்கள் அவரது தலையிலும் கழுத்திலும் தொடர்ந்து கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலின்போது ஜக்ஜித் சிங் உடலில் 60-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கட்கிலைச் சேர்ந்த ஜக்ஜித்தின் தந்தை தர்செம் சிங், தனது மகனும் ஜஷன் கவுரும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்ததாகக் கூறினார். திருமணம் குறித்துப் பேசுவதற்காகத் தங்கள் குடும்பத்தினர் ஜஷனின் உறவினர்களை அணுகியதாகவும், ஆனால் அவர்கள் சம்மதிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்தத் தம்பதியினர் வீட்டை விட்டு வெளியேறி, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணமே தாக்குதலுக்குக் காரணம் என ஜக்ஜித்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.