×

9 மாத குழந்தையின் வாயில் ‘பெவி குயிக்’ ஊற்றிய அத்தை

 

புனேவில் குடும்பத் தகராறு காரணமாக தனது சகோதரரின் 9 மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற சூப்பர் க்ளூ ஊற்றியதாக குழந்தையின் அத்தை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


புனேவின் லோஹேகான் பகுதியின் கல்வாட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அல்தாஃப் நபி ஷேக். இவரது சகோதரி சானியா ஷேக். இவர் குடும்பத் தகராறு காரணமாக தனது சகோதரர் அல்தாஃப் நபி ஷேக்கின் 9 மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற சூப்பர் க்ளூ ஊற்றியயுள்ளார். குழந்தையின் உதடுகள் ஒட்டியதையடுத்து மருத்துவமனை ICU-வில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தகவல் குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையின் அத்தை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றுவருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, அல்தாஃப் ஷேக்கின் மனைவி ஜைனப் மற்றும் அவரது மருமகள் சானியா ஷேக் ஆகியோருக்கு இடையே சில காலமாக குடும்ப விவகாரங்கள் தொடர்பாக அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. இந்த தகராறை கருத்தில் கொண்டு, வீட்டில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த ஒன்பது மாத குழந்தையின் வாயில் பெவி குயிக் போன்ற சூப்பர் க்ளூ ஊற்றியுள்ளார்.