×

தமிழகம் முழுவதும் அக்.9 ஆம் தேதி சலூன் கடைகளை அடைத்து போராட்டம்!

அக்.9 ஆம் தேதி முடித்திருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம். இவரின் 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில்
 

அக்.9 ஆம் தேதி முடித்திருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக சவரத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம். இவரின் 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த 30 ஆம் தேதி நீதிபதி புருஷோத்தமன் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து திண்டுக்கல் நீதிமன்ற வளாகம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


.