×

`ரூ.16 லட்சம் பீஸ் கட்டுங்கள் கொரோனா; நோயாளியை அதிரவைத்த தனியார் மருத்துவமனை !’- சென்னையில் தொடரும் அவலம்

சென்னையில் கொரோனா நோயாளிக்கு 16 லட்சம் கட்டணம் கட்ட சொன்னதால் தனியார் மருத்துவமனையின் முன்பு உறவினர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. நிர்வாகத்துடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. பாதிப்புகளும் உயர்ந்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேதனையான என்னவென்றால், கொரோனா நோயாளிகளை தவிர மற்ற
 

சென்னையில் கொரோனா நோயாளிக்கு 16 லட்சம் கட்டணம் கட்ட சொன்னதால் தனியார் மருத்துவமனையின் முன்பு உறவினர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. நிர்வாகத்துடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வருகிறது. பாதிப்புகளும் உயர்ந்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேதனையான என்னவென்றால், கொரோனா நோயாளிகளை தவிர மற்ற நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மறுத்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை அனுமதிக்கும் தனியார் மருத்துவமனை, லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை நடந்துள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோய் தொற்று காரணமாக சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மொத்தமாக 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொன்னதால் மொத்தமாக பணம் கட்டி இருக்கின்றனர். தற்போது நோய்த்தொற்று குணமாகி விட்டது. ஆனால் இதயத்தில் பிரச்சினை இருப்பதாகவும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறுவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மீதம் 11 லட்சத்தை உடனடியாக கட்டுமாறு மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பணம் கட்டுவதற்கு வழியில்லாத அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். முதலில் 5 லட்சம் மட்டுமே செலவாகும் என்று சொல்லிவிட்டு தற்போது 16 லட்சம் என்றால் எங்கே செல்வது என்று அழுது புலம்பியபடி கேட்கிறார் நோயாளியின் மனைவி ஜெகதீஸ்வரி. இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தனியார் மருத்துவமனையின் இந்த அடாவடி வசூலால் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.