×

`கடன் வாங்க வில்லை; ரூ.7 லட்சத்தை வட்டியுடன் கட்டணுமாம்!’- தொழிலதிபரை அதிரவைத்த தனியார் வங்கி மேலாளர்

தொழிலதிபர் வாங்காத ரூ.7 லட்சம் கடனை வட்டியோடு செலுத்தும்படி தனியார் வங்கி மேலாளர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்செங்கோட்டில் நடந்துள்ளது. இது தொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குப்பாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டியன். இவர் தனது ஊரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில், கேசவப்பாண்டியன்,
 

தொழிலதிபர் வாங்காத ரூ.7 லட்சம் கடனை வட்டியோடு செலுத்தும்படி தனியார் வங்கி மேலாளர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்செங்கோட்டில் நடந்துள்ளது. இது தொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குப்பாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டியன். இவர் தனது ஊரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில், கேசவப்பாண்டியன், நாமக்கல் எஸ்பியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த டிசம்பர் மாதம் தனது வங்கிக் கணக்கில் தன்னைக் கேட்காமலும் ஆவணங்களைப் பெறாமலும், வங்கி கிளை மேலாளர் 7 லட்சம் ரூபாய் கடன் வரவு செய்துள்ளார்.


இதுகுறித்து கேள்வி கேட்டபோது, வங்கி கிளை மேலாளர் குஞ்சிதபாதம், பொது மேலாளர் மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் தன்னை மிரட்டினர். தனது வங்கிக் கணக்கு குறித்து பல பொய் ஆவணங்களைத் தயாரித்து தனது நிறுவனத்தை வாராக் கடன் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில், வங்கி கிளை மேலாளர் குஞ்சிதபாதம், பொது மேலாளர் மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து வங்கியின் பொது மேலாளர் மோகனோ, “இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கிறது” என்றதோடு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.