×

உஷார் ! சமூக ஊடகத்தில் உங்க நம்பர் இருக்கா?- வீட்டிலிருக்கும் பெண்களுக்கு நள்ளிரவில் வரும் வீடியோ கால் – பலான படங்கள் அனுப்பி மிரட்டும் வாலிபர் ..

தெலுங்கானாவில் ஹைதராபாத்தை சேர்ந்த துர்கா பிரசாத் என்ற வாலிபர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர் ,அவர் தினமும் சமூக ஊடகங்களில் பலான படங்களை பார்த்து ரசிப்பார் .மேலும் அவர் சமூக ஊடகங்களிலிருந்து பல பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அவர்களுக்கு அடிக்கடி நள்ளிரவில் வீடியோ கால் பேசியுள்ளார் .அப்போது அவர்களுக்கு பலான படங்களையும் ,மெஸ்ஸேஜ்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்புவார் .அதற்கு பிறகு அவர்களிடம் அவர்களின் அந்தரங்க படங்களை கேட்டு மிரட்டுவார் . இப்படி அவர் பல பெண்களிடம் டார்ச்சர்
 

தெலுங்கானாவில் ஹைதராபாத்தை சேர்ந்த துர்கா பிரசாத் என்ற வாலிபர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர் ,அவர் தினமும் சமூக ஊடகங்களில் பலான படங்களை பார்த்து ரசிப்பார் .மேலும் அவர் சமூக ஊடகங்களிலிருந்து பல பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அவர்களுக்கு அடிக்கடி நள்ளிரவில் வீடியோ கால் பேசியுள்ளார் .அப்போது அவர்களுக்கு பலான படங்களையும் ,மெஸ்ஸேஜ்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்புவார் .அதற்கு பிறகு அவர்களிடம் அவர்களின் அந்தரங்க படங்களை கேட்டு மிரட்டுவார் .


இப்படி அவர் பல பெண்களிடம் டார்ச்சர் செய்துள்ளார் .அப்படி அவர் கேட்கும் படங்களை அனுப்பாத பெண்களிடம், அவர்களின் போன் நம்பரையும் ,போட்டோவையும் ஆபாச வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவார் .இப்படி அவரின் பாலியல் டார்ச்சரை ஒரு பெண் வக்கீலிடம் காமித்துள்ளார் .இவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வக்கீல் அவரை பற்றி போலீசில் புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்ற போலீசார் அவரின் போன் நம்பரை ரகசியமாக கண்காணித்தனர் .பிறகு அவரை கையும் களவுமாக கடந்த வாரம் கைது செய்தனர் .
பிறகு அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .அவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள் .