×

"கரு உருவானபோதெல்லாம் கலைத்து விட்டு ..." -கண்ணீர் விட்ட பெண்-அமைச்சர் மகனின் அட்டகாசம் 

 


ராஜஸ்தான் மந்திரி மகன் தன்னை பலமுறை பலாத்காரம் செய்து ,கருவை கலைத்ததாக ஒரு பெண் புகார் கூறியதால் அவர் மீது  போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ராஜஸ்தான் அமைச்சர் மகன் 
ரோகித் ஜோஷியுடன் ‘பேஸ்புக்’ மூலம்  பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி அப்பெண்ணை  அவர் கூப்பிட்டதால் அவர் நேரில் சந்திக்க சென்றார்  . அப்போது, அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்ததால், அதை குடித்த அந்த பெண் மயங்கி விட்டார்  
அதன்  பின்னர் அந்த ஜோஷி அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அந்த பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு அதை காமித்து மிரட்டி அவர் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அப்பெண் கர்ப்பமான போது அவரை  கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காமித்து அந்த கரப்ப்த்தை  கலைத்து விட்டார் .ஆனால் இப்போது அவர் கல்யாணத்திற்கு மறுப்பதாக அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கூறியுள்ளார் 
அப்பெண்ணின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அத்தகவலை ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தெரிவித்தனர். ராஜஸ்தான் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வார்கள் என்று அவர்கள் கூறினர்.