×

"பாலத்துக்கு கீழே  பாவாடை தாவணியை கழட்ட சொல்லி  .."ஒரு போலீசால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

மனநிலை குன்றிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ்க்காரர்  கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள கொல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மகள் 25 வயதான காந்திமதி மனநிலை பாதித்தவர் ஆவார் .அவர் அந்த பகுதியில் சாலையில் தனியே சென்று கொண்டிருந்தார் .அப்போது திருச்சி மாநகர ஆயுதப்படை கம்பெனியில் பணிபுரியும் கருணாநிதி என்பவர் அந்த காந்திமதியை மிரட்டி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் கீழே ரயில்வே கிராசிங்கில் உள்ள பாழடைந்த அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்ற சொல்லி அமர வைத்திருந்தார். இதை அந்த வழியே சென்ற ஒருவர் பார்த்துவிட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் 
இதுகுறித்து தகவல் அறிந்த தகவலறிந்த அந்த ஊர்  காவல்துறையினர் ,அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர் .பின்னர் அந்த காந்திமதியின் நிலை கண்டு மிகவும் மன வேதனையடைந்து அவருக்கு உடையணிவித்து அவரை மீட்டு  சென்றனர் .அதற்குள் அங்கிருந்த போலீஸ் கருணாநிதி தப்பித்து ஓடி விட்டார் .பிறகு அந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த  கருணாநிதியை போலீசார் கைது செய்தனர் .