×

19 வயதிலேயே 8 திருமணம்! அத்தையுடன் சேர்ந்து தில்லுமுல்லுவில் ஈடுபட்ட ப்ளே கேர்ள்

 

ஆந்திராவில் 19 வயது பெண் தாய்வழி அத்தையுடன் சேர்ந்து 8 திருமணம் செய்து மோசடி  செய்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகாரை அடுத்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரில் உள்ள கர்ஜி தெருவைச் சேர்ந்த முத்திரெட்டி வாணி (19). சிறு வயதிலேயே பெற்றோர் இறந்ததால்  தனது தாய்வழி அத்தை யம்படா சந்தியாவுடன் சேர்ந்து வசித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணத்தின் பெயரில் பலரை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  திருமணம் செய்து கொள்வதாக மாப்பிள்ளை வீட்டாரை நம்ப வைத்து அவர்களிடமிருந்து எதிர் வரதட்சணையாக வாங்கி திருமணத்திற்குத் தயாராகி திருமணம் செய்து கொண்ட பிறகு, யாரிடமும் சொல்லாமல் நகை பணத்துடன்  ஓடிவிடுவது வழக்கம். 

அவ்வாறு சமீபத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம்பேட்டில் உள்ள துர்காதேவி கோயிலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை வாணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, மணமகன் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் ரயிலில் செல்லும்போது, ​​ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவில் தனது புது கணவருடன் சென்ற வாணி விஜயநகரம் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு செல்வதாகக் கூறி  ரயிலில் இருந்து இறங்கி தப்பினார். நீண்ட நேரம் ஆகியும் வாணி வராததால்  என்ன நடந்தது என்று தெரியாமல் மணமகனும் அவரது குடும்பத்தினரும் வாணியை தேடி, இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சந்தியா வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்தியா வீட்டில் வாணி இருந்தார். இதனால் என்ன நடந்தது என விசாரித்தபோது இவர்கள் திருமணம் என்ற பெயரில் பணம், நகைகளை பெற்று கொண்டு ஏமாற்றி வருவதை வழக்கமாக கொண்ட விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் திருமணத்தின் போது கொடுத்த பணத்தை கேட்டனர். பணத்தை தருவதாக கூறிய சந்தியாவும், வாணியும் இரவோடு இரவாக தலைமறைவாகிவிட்டனர். இதனால் இச்சாபுரம் காவல் நிலையத்திம்  திருமணம் செய்வதற்கு முன்பு  வாணியிடம்  ஒரு லட்சம் பணமும், துணிமணிகள் மற்றும் பிற செலவுகளையும் கொடுத்ததாகவும்  வாணியும், சந்தியாவும் அவற்றை எடுத்து கொண்டு இருவரும் தலைமறைவாகி தப்பிச் சென்றதாக கூறினர்.   

வாணியால் ஏமாற்றப்பட்ட பலரும் வாணி இதற்கு முன்பு மைனர் பெண் என்பதால் புகார் அளிக்கவில்லை. ஆனால் தற்போது 19 வயது ஆனதால்  வாணி , சந்தியாவால் ஏமாந்த   மேலும் சிலரான நாகி ரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து  இச்சாபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா, வாணி இருவரும் சேர்ந்து இதுவரை 8 பேரை திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் சேகரித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை வைத்து இச்சாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  வாணிக்கு 19 வயது என்பதால் இந்த  திருமண மோசடிகள்  அனைத்தும் வெளியே வந்ததால் போலீசார் வாணி , சந்தியா இருவரையும் தேடி வருகின்றனர்.