×

பைக் திருட்டில் ஈடுபட்ட பாஸ்டர் கைது! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்பு வழங்குபவர்கள் பாஸ்டர்கள். ஆனால் ஒரு பாஸ்டரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. தேனியைச் சேர்ந்த பாஸ்டர் விஜயன் சாமுவேல் மதுரையின் புறநகர்ப் பகுதியான தனக்கன்குளத்தில் பிரார்த்தனை கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வாடகை இடம் ஒன்றில் இந்த பிரார்த்தனைக் கூடத்தை நடத்தி வருகிறார். கொரோனா தாக்கத்தால் அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதித்த ஊரடங்கு இவரையும் விட்டுவைக்கவில்லை. கூடத்திற்கு வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்
 

செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்பு வழங்குபவர்கள் பாஸ்டர்கள். ஆனால் ஒரு பாஸ்டரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

தேனியைச் சேர்ந்த பாஸ்டர் விஜயன் சாமுவேல் மதுரையின் புறநகர்ப் பகுதியான தனக்கன்குளத்தில் பிரார்த்தனை கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வாடகை இடம் ஒன்றில் இந்த பிரார்த்தனைக் கூடத்தை நடத்தி வருகிறார். கொரோனா தாக்கத்தால் அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதித்த ஊரடங்கு இவரையும் விட்டுவைக்கவில்லை. கூடத்திற்கு வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளார் பாஸ்டர்.

ரோட்டில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை திருடி அவற்றிலுள்ள ஆவணங்களின் நகல்களை வைத்து விற்றுள்ளார். கம்பத்தைச் சேர்ந்த தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரார்த்தனைக்கு வருபவர் ஒருவருக்கும் மொத்தம் மூன்று திருட்டு வண்டிகளை கொடுத்துள்ளார்.

சாமுவேல் திருட்டு ஒன்றை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்ற போது இதுபோல் தனது கஸ்டமரின் பைக் ஒன்று காணாமல் போனதை சுதாரித்த மெக்கானிக் போலீசிடம் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீஸ் வந்து சாமுவேலை கைது செய்துள்ளனர்.