#BREAKING பஞ்சாயத்து தலைவர் கல்லால் அடித்துக் கொலை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் இசக்கி பாண்டியன் என்பவருக்கும், மகாராஜனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மகாராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மகாராஜன் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 68 வயதான மகாராஜன் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துவந்த நிலையில், குடிநீர் விநியோகம் தகராறில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.