சென்னை மாநகராட்சி பூங்காவில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை- வடமாநில இளைஞர்கள் இருவர் கைது!! கொடூர பின்னணி
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பதியுள்ளது.
சென்னையில் உள்ள ஹோட்டல்களில்( பிரியாணி கடைகளில் வேலை) வேலை செய்யும் பீகார் தொழிலாளிகளான முகமது மஹலாப், முகமது ஆதில் இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அறையில் தூங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணிக்கு நாக்கு வறண்டு இருவருக்கும் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இருவரும் தண்ணீர் குடித்துவிட்டு, போதை தெளிவதற்காக டீ குடிப்பதற்காக பேருந்து நிலையம் அருகே சென்று டீ குடித்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் நின்ற “மூதாட்டி டீ.. குடிக்க காசு கொடு” எனக் கேட்டுள்ளார். டீ குடித்த பிறகும் போதை தெளியாமல் இருந்த அந்த வடமாநிலத்தவர், இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை மூதாட்டியிடம் கொடுத்துள்ளனர். பிறகு ரேபிடோ புக்கிங் செய்துள்ளனர். ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுனர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அவர் அந்த மூதாட்டி யார் என கேட்டுள்ளார்? அதில் முகமது மகலாப் என்பவர் எங்க அம்மா தான்.. டீ குடிக்க வந்தோம்.. திரும்ப வீட்டுக்கு செல்கிறோம் என கூறியுள்ளார்.
இதையடுத்து மூதாட்டியை ரேபிடோ பைக் டாக்ஸியி்ல் அழைத்துக் கொண்டு, தாங்கள் தங்கி இருக்கும் வாடகை வீடு அருகே இறங்கியுள்ளார். முகமது ஆதில் நடந்தே வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அறைக்குள் முகமது மகலாப் அழைத்துச் செல்ல முயன்றபோது, மூதாட்டி வரமறுத்துள்ளார். சரி... கடையிலே போய் மீண்டும் டீ குடிக்கலாம்... என மூதாட்டியை சமாதானப்படுத்தி அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நடந்து வந்து கொண்டிருந்த முகமது ஆதிலும் பூங்காவுக்கு வந்துள்ளார். பிறகு மூதாட்டியை மிரட்டி காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அதன் பிறகு அங்கிருந்து இருவரும் தப்பி வாடகை வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர். ரத்தக் காயங்களுடன் மூதாட்டி அழுதபடியே சாலையில் நிற்க... அந்த வழியாக வந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையில் பய உணர்ச்சி காரணமாக மூதாட்டி எப்படி இருக்கிறார் என பார்ப்பதற்காக முகமது மஹலாப்பும், முகமது ஆதிலும் பூங்காவுக்கு நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், இவர்கள் மீது சந்தேகம் அடைந்து விசாரித்துள்ளார். டீ குடிக்க செல்கிறோம் சார் என கூறியுள்ளனர். இருப்பினும் இருவரையும் போட்டோ எடுத்து இரவு பணியில் உள்ள காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். நேற்று காலையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகவே, வேளச்சேரி போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் நடந்து சென்றது தெரியவந்தது. இரவு பணியில் இருந்த ரோந்து காவலர் அனுப்பிய போட்டோவும் இவர்கள்தான் என தெரிய வந்தது. இதையடுத்து வேளச்சேரி தனிப்படை போலீசார் விரைந்து சென்று அறையில் இருந்த இரண்டு பீகார் இளைஞர்களையும் கைது செய்தனர். இன்று காலை இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், இந்த வழக்கில் கைதான மஹலாப், ஆதில் இருவரையும் நிற்க வைத்து அடையாளம் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். ரோந்து காவலர், ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஆகியோர் இந்த அணிவகுப்பில் பங்கேற்று குற்றவாளிகளை அடையாளம் காட்டி உறுதி செய்வார்கள்.