×

 12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசேஜ்... ஆங்கில ஆசிரியர் செய்த அசிங்கம்

 

ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி  மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து,மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதிக்குட்பட்ட ஜக்கம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜதானி பகுதியை சேர்ந்த ரஞ்சீத்குமார் என்ற ஆங்கில ஆசிரியர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொல்லை அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகாரின்பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளியில் நேரில்வந்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் சந்திரா ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி  மகளிர் காவல்துறையினர் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.