×

ஆசை ஆசையாக வளர்த்தார்… கூண்டைவிட்டு பறந்து சென்ற பச்சைக் கிளி… வேதனையில் உயிரை மாய்த்த சிறுமி

ஆசை ஆசையாக வளர்த்த பச்சைக் கிளி கூண்டை விட்டு பறந்து சென்றதால் வேதனையில் சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய், கிளி, மைனா, பூனை ஆகியவற்றை மனிதர்கள் தங்கள் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த செல்லப் பிராணிகள் இறந்தாலோ, மயமானாலோ தங்கமுடியாது வேதனை அடைக்கின்றனர். சிலர் இதை சாதாரணமாக விட்டுவிடுவர். இந்த நிலையில் தான் ஆசையாக வளர்த்த கிளி பறந்து போனதால் வேதனையில் சிறுமி ஒருவர்
 

ஆசை ஆசையாக வளர்த்த பச்சைக் கிளி கூண்டை விட்டு பறந்து சென்றதால் வேதனையில் சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய், கிளி, மைனா, பூனை ஆகியவற்றை மனிதர்கள் தங்கள் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த செல்லப் பிராணிகள் இறந்தாலோ, மயமானாலோ தங்கமுடியாது வேதனை அடைக்கின்றனர். சிலர் இதை சாதாரணமாக விட்டுவிடுவர். இந்த நிலையில் தான் ஆசையாக வளர்த்த கிளி பறந்து போனதால் வேதனையில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கூடலூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஜனிதா. இந்த தம்பதியின் ஒரே மகள் சுஜித்ரா (10). ராமசாமியும், ஜனிதாவும் தோட்டத் தொழிலாளிகள். இதனிடையே, சுஜித்ரா ஆசையாக கிளி ஒன்றை வளர்த்துள்ளார். கடந்த 22ம் தேதி ராமசாமி தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், சுஜித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை செய்துவிட்டு மாலையில் பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மகள் சுஜித்ரா வாயில் நுரைதள்ளியபடி கீழே கிடந்துள்ளார்.

இதனால் பதறிய பெற்றோர் உடனடியாக மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுஜித்ராவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சுஜித்ராவை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுஜித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சுஜித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “சிறுமி சுஜித்ரா ஆசை ஆசையாக கிளி ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கூண்டில் வளர்க்கப்பட்ட கிளியை சிறுமி வெளியே திறந்து விட்டுள்ளார். அப்போது, கிளி பறந்துவிட்டது. கிளி பறந்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயத்தில் சிறுமி இருந்துள்ளார். மேலும் ஆசையாக வளர்த்த கிளி பறந்து சென்ற வேதனையிலும் இருந்துள்ளாள். இந்த நிலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் குடித்து உயிரிழந்துள்ளார்” என்றனர்.