×

நெல்லை இரட்டை கொலை - மேலும் 4 பேர் கைது

 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2ம் தேதி  நெல்லை மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (40) மற்றும் அவரது மகன் ஜெயராஜ் (5) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முத்துப்பட்டன்(20), மணிகண்டன் (30), மகாலிங்கம்(28)  மற்றும் கிருஷ்ணன்(31) ஆகிய 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை தனி இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். செல்போன் நெட்வொர்க், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை தந்தை-மகன் உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.