×

மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை

 

மைசூரில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு அருகே உள்ள ஹன்சூர் நகரில் நியூ மாருதி லே அவுட் பகுதியில் வசித்துவரும் ஹரிஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார். 49 வயதான ஹரிஷ், தனது 36 வயது மனைவி நிச்சிதா மற்றும் அவர்களது 13 வயது நெக்ஸா, 6 வயது ரக்‌ஷா ஆகியோரின் வாய்களை பிசின் டேப்பால் ஓட்டி, மூச்சித்திணறடிக்க செய்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஹரிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹரிஷ் தனியார் வாகன நிதிக்கடன்களை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல், வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையே இவர்களது இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.