×

விளையாடச் சென்றான்… சடலமாக கிடந்தான்… நண்பர்களிடம் கிடுக்கிப்பிடி!- இரவில் நாகையை பதறவைத்த கொலை

இரவு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற வாலிபர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினர் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன்
 

இரவு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற வாலிபர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினர் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்பது தெரியவந்தது. கத்தியால் குத்தபட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது. முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து, நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் அந்த பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

அசாருதீன் நேற்றிரவு தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். இரவு முழுவதும் வீட்டிற்கு அவர் வரவில்லை. நண்பர்களுடன் மகன் சென்றதால் பெற்றோரும் கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே, அசாருதீனின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் அசாருதீன. தனது நண்பர்களுடன் தினந்தோறும் விளையாட சென்று வந்துள்ளார். வழக்கம் போல் நண்பர்களுடன் விளையாட சென்றிருக்கிறார்கள். ஆனால் வீட்டிற்று வரவில்லை. வழக்கம் நண்பர்களுடன் சென்றதால் பெற்றோரும் மகனை தேடவில்லை. இந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், வேறு இடத்தில் கொலை செய்து சடலத்தை மர்ம நபர்கள் வீசி சென்று இருக்கலாம் என்றும் வேறு எதேனும் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

நாகையில் முஸ்லீம் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.