×

10 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்

 

கண்டாச்சிபுரத்தில் 10 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கெங்கவரம் கிராமத்தை சேர்ந்த முருகவேல் சத்தியா தம்பதியின் 10 வயது மகள் வர்ஷினி நேற்றைய தினம் மர்மமான முறையில் காயங்களுடன் வீட்டில்  இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து  கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் விரைந்து வந்த  போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து சிறுமி நகை பணத்திற்காக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் வன்புணர்வு செய்து உயிரிழந்தாரா என பல்வேறு  கோணங்களில் விசாரணை செய்தனர். 

போலீசாரின் விசாரனையில் சிறுமியின் தந்தை சரிவர வேலைக்கு செல்லாததாலும், போதிய வருவாய் இல்லாததால் சிறுமியின் தாய் சத்தியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது குழந்தையை முதலில் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வர்ஷினியின் மூச்சை அடைத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தற்கொலைக்கு பயந்து சத்தியா தனது மகளை யாரோ கொலை செய்துவிட்டு சென்றதாக நாடகமாடியது போலீசாரின் விசாரனையில் தெரியவந்தது இதனையடுத்து தற்கொலை செய்து நாடகமாடிய சிறுமியின் தாயார் சத்தியாவை  போலீசார் கைது செய்தனர்.