×

போதையால் மாறிய தாயின் பாதை… ஐந்து வயது மகனை கொன்று புதைத்த கொடூரம்!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் ஜோன் கன்னிங்ஹாம் என்ற ஒரு பெண்ணுக்கு அமெரிக்க நீதிமன்றத்தால், அவருடையஐந்து வயது மகன் ஆண்ட்ரூவை கொலை செய்து வீட்டருகே புதைத்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் ஜோன் கன்னிங்ஹாம் என்ற பெண்ணுக்கும் பிராயண்ட் என்பவருக்கும் ஆண்ட்ரு என்கிற ஐந்து வயது மகனிருந்தான். அவன் பிறந்ததிலிருந்தே அவரின் தாய் ஜோன்னுக்கு நிறைய போதை பழக்கும் இருந்தது. அதனால் அவர் போதையில் என்ன செய்வார், எப்படி இருப்பார்
 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் ஜோன் கன்னிங்ஹாம் என்ற ஒரு பெண்ணுக்கு அமெரிக்க நீதிமன்றத்தால், அவருடையஐந்து வயது மகன் ஆண்ட்ரூவை கொலை செய்து வீட்டருகே புதைத்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் ஜோன் கன்னிங்ஹாம் என்ற பெண்ணுக்கும் பிராயண்ட் என்பவருக்கும் ஆண்ட்ரு என்கிற ஐந்து வயது மகனிருந்தான். அவன் பிறந்ததிலிருந்தே அவரின் தாய் ஜோன்னுக்கு நிறைய போதை பழக்கும் இருந்தது. அதனால் அவர் போதையில் என்ன செய்வார், எப்படி இருப்பார் என்று அவருக்கே தெரியாது. இந்த போதை பழக்கத்தினை நிறுத்த மனநல ஆலோசகரிடம் சிகிச்சைக்கு கூட போனார். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை.


இந்நிலையில் திடீரென ஒரு நாள் அவரின் மகனை காணவில்லை என்று அவர் புகாரளித்தார். போலீசாரும் ,குழந்தைகள் நல அமைப்பினரும் அவரின் வீட்டிற்கு விசாரணைக்கு வந்தபோது, வீட்டின் குப்பை தொட்டி அருகே வந்த கெட்ட வாசனையால் அங்கு தோண்டி பார்த்தனர் .அப்போது அங்கே அவர்கள் கண்ட காட்சியால் இடிந்து போனார்கள். ஆம் ,அங்கு அவரின் தாயால் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஆண்ட்ரு பிணமாக புதைக்கப்பட்டிருந்தான்.
உடனே போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடலை அனுப்பி விசாரித்த போது, அவரின் தாயே போதையின் பழக்கத்தால் மகனை கொலை செய்து புதைத்த விஷயம் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடந்த விசாரணையில் அவருக்கு அமெரிக்க கோர்ட் 35 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.