×

பிச்சை எடுத்து நாலு வீடு வாங்கிய மாமியார் -அந்த வீட்டை கொடுக்காததால் கொலை செய்த மருமகள்..

மும்பை செம்பூரில் ஒரு மூதாட்டி பிச்சையெடுத்தே நான்கு வீடுகள் வாங்கி வாடகை விட்டு சம்பாதித்த விஷயம் கேள்விப்பட்ட பலர் ஆச்சர்யப்பட்டனர் .ஆனால் அந்த மூதாட்டி அந்த சொத்தை கொடுக்காததால், மருமகள் மூலம் கொலை செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர் . மகாராஷ்டிரா மாநிலம் செம்பூரில் உள்ள எஸ்.ஆர்.ஏ கட்டிடத்தில் வசிக்கும் சஜனா என்ற மூதாட்டி , அங்கு இரண்டு குடியிருப்புகள் மற்றும் வொர்லியில் இரண்டு குடியிருப்புகள் என மொத்தம் நான்கு குடியிருப்புகள் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தினமும் காட்கோபரில்
 

மும்பை செம்பூரில் ஒரு மூதாட்டி பிச்சையெடுத்தே நான்கு வீடுகள் வாங்கி வாடகை விட்டு சம்பாதித்த விஷயம் கேள்விப்பட்ட பலர் ஆச்சர்யப்பட்டனர் .ஆனால் அந்த மூதாட்டி அந்த சொத்தை கொடுக்காததால், மருமகள் மூலம் கொலை செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர் .

மகாராஷ்டிரா மாநிலம் செம்பூரில் உள்ள எஸ்.ஆர்.ஏ கட்டிடத்தில் வசிக்கும் சஜனா என்ற மூதாட்டி , அங்கு இரண்டு குடியிருப்புகள் மற்றும் வொர்லியில் இரண்டு குடியிருப்புகள் என மொத்தம் நான்கு குடியிருப்புகள் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தினமும் காட்கோபரில் உள்ள ஒரு சமண கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்து இதையெல்லாம் சம்பாதித்துள்ளார் .


மேலும் அவர் அந்த பிச்சையெடுத்த பணத்தை மறைத்து வைத்துக்கொள்வாராம் ,.மருமகள் அஞ்சனா அடிக்கடி அந்த பணத்தை அவரிடம் கேப்பாராம் , இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வருமாம் . அவரின் மற்ற மூன்று குடியிருப்புகளை வாடகைக்கு விட்டுவிட்டு , மருமகள் அஞ்சனா, அவரது கணவர் தினேஷ் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் தனக்குச் சொந்தமான இன்னொரு பிளாட்டில் தங்கியிருந்தார்.

திங்கள்கிழமை பிற்பகல், மாமியாரும் மருமகளுக்கும் சொத்து விஷயமாக மீண்டும் சண்டை வந்துள்ளது . அப்போது ஆத்திரமடைந்த அஞ்சனா, மாமியார் சஜனாவை கிரிக்கெட் மட்டையால் பல முறை தலையில் அடித்தார்.பிறகு அஞ்சனா ஒரு மொபைல் சார்ஜரைப் பயன்படுத்தி சஜனா இறக்கும் வரை கழுத்தை நெரித்தார். பின்னர், அவர் தனது பக்கத்து வீட்டுநபர் உதவியுடன் அவரை ராஜவாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மாமியார் குளியலறையில் தவறி விழுந்ததாக மருத்துவர்களிடம் கூறினார்.

சஜனாவின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், சில கூர்மையான பொருளால் தாக்கப்பட்டதால் உண்டான காயங்கள் , அவரது கழுத்தில் இருப்பதை கண்டதும் இது ஒரு நாடகம் என சந்தேகித்தனர். இதனால் அவர்கள் திலக் காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்ததும், அவர்கள் வந்து மருமகள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர் .