கணவன்- மனைவி சண்டையை தடுக்க சென்ற மாமியார் கொலை!
பாவந்தூர் கிராமத்தில் கணவன் மனைவி குடும்ப தகராறில் மாமியாரை தாக்கி கொலை செய்த வழக்கில் மருமகன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா(30)- மீனா-(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா அம்மா தனலட்சுமி வ(யது 65) என்பவர் நேற்று தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் சிவா - மீனா இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, கணவன் மனைவியை தாக்கியுள்ளார். அதனை தடுக்கின்றபோது இரும்பு ராடால் மாமியாரை சிவா தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . காயமடைந்த மீனாவும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.