காதலிக்காக 5 மாத ஆண் குழந்தையை கொன்ற தாய் கைது! ஓரினச்சேர்க்கை காதலியும் கைது
ஓசூர் அருகே ஓரின சேர்க்கை விபரிதம் 5 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவத்தில் தாய் மற்றும் தோழி கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சுரேஷ் 38, பாரதி 25 தம்பதிகள், ஆறு வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது, இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு துருவன் என பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இருந்ததாக மனைவி கூறியதை அடுத்து இயற்கை மரணம் எனக் கருதி குழந்தையை மறுநாள் அடக்கம் செய்தனர். நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்திருக்கும் என சுரேஷுக்கு மனைவி மீது சந்தேகம் வரவே அவருடைய செல்போனை பார்க்கும்போது தவறான போட்டோக்கள் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், போட்டோவில் இருப்பது எதிர்விட்டு சுமித்ரா வயது 22 என்ற இளம் பெண் இருப்பது தெரியவந்தது. மேலும் ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதை அடுத்து குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கெலமங்கலம் போலீசில் சுரேஷ் புகார் அளித்தார் புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் மனைவி பாரதி மற்றும் திருமணம் ஆகாத தோழி சுமித்ரா 22 வயது இருவரிடம் விசாரணை நடத்தி இருவரையும் கிருஷ்ணகிரி காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் சுரேஷ் , அதன் அடிப்படையில் நேற்று தேன்கனிக்கோட்டை தாசில்தார் முன்னிலையில் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு அங்கேயே புதைத்தனர். இதனையடுத்து போலீசாரிடம் சுரேஷ் அளித்த ஆடியோ பதிவு மற்றும் போட்டோக்களை வைத்து மனைவி மற்றும் தோழியிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்றது அம்பலமானது. இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.