×

`கணவனின் இழப்பை தாங்க முடியவில்லை; தந்தையை கஷ்டப்படுத்த விரும்பவில்லை!’- தாய், மகள் எடுத்த விபரீதம்

சென்னை கீழ்கட்டளையில் கணவர் இறந்த துக்கத்திலிருந்த மனைவி, தன்னுடைய மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை கீழ்கட்டளை காமராஜர்நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (81) என்பவரின் மூன்றாவது மகள் பிரபாவதி. இவரது மகள் சொப்னா. 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் குடியிருந்து வந்தனர். பிரபாவதியின் கணவர் கோவிந்தசாமி, 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த பிரபாவதிக்கும் பேத்திக்கும் செல்வராஜ் ஆறுதலாக இருந்து வந்துள்ளார். வயதான
 

சென்னை கீழ்கட்டளையில் கணவர் இறந்த துக்கத்திலிருந்த மனைவி, தன்னுடைய மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை கீழ்கட்டளை காமராஜர்நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (81) என்பவரின் மூன்றாவது மகள் பிரபாவதி. இவரது மகள் சொப்னா. 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் கீழ்கட்டளை துரைசாமி நகர், 1-வது தெருவில் குடியிருந்து வந்தனர். பிரபாவதியின் கணவர் கோவிந்தசாமி, 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை இழந்த பிரபாவதிக்கும் பேத்திக்கும் செல்வராஜ் ஆறுதலாக இருந்து வந்துள்ளார். வயதான காலத்திலும் மகளின் குடும்பச் செலவுக்கு செல்வராஜ் பணம் கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 28-ம் தேதி காலை மகளையும் பேத்தியையும் சந்தித்துவிட்டு சென்றுவிட்டு செல்வராஜ், அடுத்த நாள் அதாவது 29-ம் தேதி காலை 8 மணியளவில் மீண்டும் மகளையும் பேத்தியையும் பார்க்க வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படாததால் திரும்பிச் சென்றுவிட்டார் சென்றுவிட்டார். பின்னர் அன்று மாலை 4 மணியளவில் இளைய மகள் கவிதாவுடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்துள்ளார் செல்வராஜ். அப்போதும் வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

ஜன்னல் வழியாக செல்வராஜிம், அவரது மகள் கவிதாவும் வீட்டின் உள்ளே பார்த்தபோது ஒரே சேலையில் பிரபாவதியும் சொப்னாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து செல்வராஜ், கவிதா அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தாய், மகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், மகள் மரணம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விசாரித்துவருகிறார்.

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் செல்வராஜ் அளித்த புகாரில், எனக்கு 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகளும் மூன்றாவது மகளும் கீழ்கட்டளையில் குடியிருந்துவருகின்றனர். கடைசி மகள் கவிதா வீட்டில் நான் 3 மாதங்களாக குடியிருந்து வருகிறேன். மூன்றாவது மகள் பிரபாவதியின் கணவர் இறந்துவிட்டதால் அவளை நான்தான் கவனித்து வந்தேன். கணவர் இறந்தப்பிறகு பிரபாவதி யாருடனும் சரியாக பேசமாட்டார். அடிக்கடி டென்ஷனாக இருப்பார். கணவர் இறந்த துக்கத்திலிருந்த பிரபாவதி, அவள் மகளுடன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இருவரின் சடலங்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வயதான காலத்தில் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாத பிரபாவதி மகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.