×

“ஜீன்ஸ் போட விடாம ,வேலைக்கும் போக விடாம, அறையில் அடைத்து..” -கால் சென்டர் பெண் கதறல்.

காதல் திருமணம் செய்து கொண்ட தனது காதலன், தன்னை ஜீன்ஸ் போடவிடாமல் ,வேலைக்கும் போக விடாமல் கொடுமை செய்வதாக கால் சென்டர் பெண் போலீசில் புகார் கூறியுள்ளார் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஃபதேவாடி வட்டாரத்தில் வசிக்கும் சாஹிபா என்ற பெண் ஒரு ஐ டி நிறுவனத்தில் கால் சென்டரில் பணி புரிந்தார் .அங்கு அவர் சாஹித் என்ற வாலிபரை காதலித்தார் .அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் .இந்த திருமணம் சாஹித்துக்கு மூன்றாவது திருமணம் ஆகும்
 


காதல் திருமணம் செய்து கொண்ட தனது காதலன், தன்னை ஜீன்ஸ் போடவிடாமல் ,வேலைக்கும் போக விடாமல் கொடுமை செய்வதாக கால் சென்டர் பெண் போலீசில் புகார் கூறியுள்ளார்


குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஃபதேவாடி வட்டாரத்தில் வசிக்கும் சாஹிபா என்ற பெண் ஒரு ஐ டி நிறுவனத்தில் கால் சென்டரில் பணி புரிந்தார் .அங்கு அவர் சாஹித் என்ற வாலிபரை காதலித்தார் .அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் .இந்த திருமணம் சாஹித்துக்கு மூன்றாவது திருமணம் ஆகும் .ஆனால் அந்த பெண் சாஹிபாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும் .அவர்களின் திருமணத்திற்கு முன்பாக அந்த பெண் சாஹிபா அந்த காதலனிடம் ஒரு கண்டிஷன் போட்டார் .அதன் படி தான் கல்யாணத்திற்கு பிறகு எப்போதும் வேலையை விடமாட்டேனென்றும் ,மேலும் அவரின் பெற்றோரோடு வசிக்க மாட்டேனென்றும் கண்டிஷன் போட்டார் .இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதால் அவர் சாஹித்தை கல்யாணம் செய்து கொண்டார் .
இருவரின் கல்யாணத்திற்கு பிறகு அந்த பெண்ணின் தந்தை வாங்கிக்கொடுத்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள் .அதன் பிறகு சிலநாள் கழித்து அந்த கணவன் அந்த பெண்ணை வேலையை விட்டு விட சொல்லியும் ,நவீன உடைகள் உடுத்தவும் தடை விதித்தார் .மேலும் அந்த பெண்ணை ஜீன்ஸ் போட கூடாது என்று உத்தரவு போட்டார் .அதுமட்டுமல்லாமல் அவரின் மாமியார் அந்த பெண்ணை கண்டபடி திட்டி கொடுமைகள் செய்துள்ளார் .மேலும் ஷாஹித் தன்னுடன் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார் .இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சாஹிபா இது பற்றி தன் கணவரிடம் கேட்ட போது ,அவர் அந்த பெண்ணை அடித்து கொடுமை செய்தார் .இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த சாஹிபா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அனைவரையும் விசாரித்து வருகிறார்கள் .