×

“கொரானான்னு கூட்டிட்டு போய் கிட்னியை உருவிட்டிங்களே” -இறந்த கொரானா நோயாளியின் உறவினர்கள் போர்க்கொடி

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு வாலிபரை விபத்தில் அடிபட்டதால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் .அப்போது அந்த வாலிபருக்கு கொரானா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் அவருக்கு பாசிட்டிவ் என்று முடிவு வந்தது ,அதனால் அவரை வேறு பிரிவுக்கு மாற்றி சிகிச்சையளித்தார்கள் . இந்நிலையில் திடீரென அவரை மருத்துவமனையிலிருந்து காணவில்லையென மருத்துவமனை நிர்வாகம் கூறியது .இதனால் அந்த வாலிபரின் உறவினர்களும் ,மருத்துவமனையும் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து அவரை
 

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு வாலிபரை விபத்தில் அடிபட்டதால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் .அப்போது அந்த வாலிபருக்கு கொரானா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் அவருக்கு பாசிட்டிவ் என்று முடிவு வந்தது ,அதனால் அவரை வேறு பிரிவுக்கு மாற்றி சிகிச்சையளித்தார்கள் .


இந்நிலையில் திடீரென அவரை மருத்துவமனையிலிருந்து காணவில்லையென மருத்துவமனை நிர்வாகம் கூறியது .இதனால் அந்த வாலிபரின் உறவினர்களும் ,மருத்துவமனையும் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்த நிலையில் அவர் திங்கள் கிழமையன்று அங்கு மருத்துவமனை அருகே சாக்கடையில் பிணமாக கிடந்தார் .
இதனால் அவரின் உடலை அவரின் உறவினர்கள் கைப்பற்றி போலீசில், தங்களின் மகனின் கிட்னியை மருத்துவமனை ஊழியர்கள் திருடி அவரை கொன்று விட்டதாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
இந்த புகார் பற்றி போலீசார் அந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் .